போதை பொருள் விற்பனையாளரான பத்தமுல்ல பன்டி கைது
போதை பொருள் விற்பனையாளரான குருப்புகே சத்துரங்க புஸ்பகுமார மெண்டிஸ் என அழைக்கப்படும் பத்தமுல்ல பன்டி நேற்று தலங்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தலங்கம பகுதியில் வீடொன்றில் ஒழிந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கமையே விசேட பொலிஸ் பிரிவு ஒன்று சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் கைது செய்யும்; போது இவரிடமிருந்து ஒரு தொகை ஹெரோயின் போதை பொருள், பணம், செல்லிடப்பேசிகள், போதை பொருள் கடத்தல்களுக்காக பயன்படுத்திய கார், உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவர் போதை பொருள் விற்பளையாளரான அங்கொட லொக்கா எனப்படும் நபரின் சீடர் என்று குறித்த சந்தேக நபர் 2017 பெப்வரி மாதம் 27 ம் திகதி களுத்தறை எத்தன பகுதியில் சிறைச்சலை பஸ் துப்பாக்கு சூட்டுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.
இதே வேளை பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களுடன் இவர் தொடர்புடையதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை பத்தரமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
