http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஜிந்துப்பிட்டியிலிருந்து கண்டக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டவர்களில் எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை

ஜிந்துப்பிட்டியிலிருந்து கண்டக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டவர்களில் எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஐந்து பி.சி.ஆர்.சோதனைகள் மூலம் எதிர்மறையான சோதனை முடிவுகளில் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு – 13 ஜிந்துபிட்டியில் கொரோனா வைரஸ்நோயாளி ஒருவருடன் தொடர்புகளை வைத்திருந்தமைக்கு அமைவாகவே குறித்த பகுதியைச் சேர்ந்த 154 பேர் கடந்த வியாழக்கிழமை கண்டகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையிலேயே அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *