http://ceylononline.lk/

Ceylon Online News Portal

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சினையினை தீர்க்கவிட்டால் பயனில்லை. நுவரெலியா மாவாட்ட ஐ.தே.க.வேட்பாளர் கே.கே.பியதாச தெரிவிப்பு.

ஐக்கிய தேசிய கட்சி மலையக மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து கொடுததிருக்கிறது.பிரஜா உரிமை,வாக்குரிமை,சீடா செயத்திட்டத்தின் மூலம் மலையக கல்வி அபிவிருத்தி,காணி உரிமை வீட்டுரிமை வீதிகள் என பல்வேறு அபிவிருத்திகளையும் உரிமைகளையும் மலையக மக்களுக்காக செய்துள்ளது.
மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களுடன் கலந்துரையாடி 1994 ஆண்டே மலையக மக்களுக்கு காணி உரிமையினை பெற்றுக்கொடுப்பதற்கான உறுதி பத்திரத்தினை பெற்றுக்கொடுத்தது. ஆனால் அதன் ;பின் வந்த அரசாங்கங்கள் அதனை நடைமுறை படுத்தவில்லை. அதன் பின் 2015 ஆண்டு மீண்டும் அரசாங்கத்தினை பொறுப்பேற்ற பின் மீண்டும் ஏழு பேச்சஸ் காணியுடன் தோட்டத்தொழிலாளர்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுத்துள்ளது.இவ்வாறு பல்வேறு வேலைத்திட்டங்களை மலையக பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் முன்னெடுத்துள்ளன. எனவே தான் மலையக மக்கள் இன்று யானையை மறப்பதில்லை. எனினும் நல்லாட்சியின் போது இந்த பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதற்கு பல கோடிக்கணக்கான நிதி கொண்டு வரப்பட்டது
கட்சியில் கையிறுலித்தல் காரணமாக அந்த நிதி மீண்டும் திறைச்சேரியினை சென்றுவிட்டது.ஆகவே எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் பயனில்லை மக்கள் பிரச்சினையினை தீர்க்காவிட்டால். என ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் கே.கே.பியதாச தெரிவித்தார்.
நேற்று (03) ஹட்டன் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் செயப்பாட்டு அலுவலகம் ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.நுவரெலியா மாவட்டத்தினை பொறுத்த வரையில் இன்று பல இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி மிகவும் பிரச்சினை;கு தள்ளப்பட்டுள்ளனர.; இவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் அதற்காக நுவெரலியா மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கும் வகையில் ஐந்து கைதொழில்சாலைகளை உருவாக்கி அவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கி இங்கே வேலை செய்வதற்கான நிலையினை உருவாக்க வேண்டும்.ஆகவே இன்று அரசாங்கம் கொரோனா தொற்று காணரமாக பெரும் பிரச்சிக்கு முகம் கொடுத்துள்ளதுஆகவே யார் ஆட்சி செய்தாலும் நாடு இருக்க வேண்டும் அப்போது தான் நாம் உயிர் வாழ முடியும.; ஆகவே நாட்டை பற்றி சிந்தித்து செயப்பட வேண்டிய மிக முக்கிய காலப்பகுதியாக இது காணப்படுகின்றது.இன்று ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள் வீடுகளை நான் கட்டிக்கொடுத்தேன் என்று ஆனால் வீடுகளை கட்டிக்கொடுத்தது ஐக்கிய தேசிய கட்சி அதில் அவர் அதற்கு பொறுப்பான அமைச்சர் மாத்திரம் தான் ஐக்கிய தேசிய கட்சி தோட்டத்தெரிலாளர்களுக்கு பல விடயங்களை செய்திருப்பதனால் தோட்டத்தொழிலாளர்கள் கடந்த காலங்களை போல் இம்முறையும் யாளையினை வெற்றிப்பெற செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *