http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அன்றிருந்த அரசாங்கம் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் ஆயிரம் ரூபாவை இலகுவாக பெற்றிருக்கலாம் நுவரெலியா மாவாட்ட வேட்பாளர் மருதபாண்டி ரமேஸ்வரன்

ஆயிரம் ரூபா சம்பந்தமாக பேசுகிறார்கள். சம்பளத்தை பெற்றுக்கொடுக்கும் நேரமோ அல்லது அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்கும் போதோ கட்சியினைப்பார்த்து பெற்றுக்கொடுக்கவில்லை. ஏனென்றால் இது நமது சமூகம்.நீங்கள் காங்கிரஸை நம்பி இருக்கிறீர்கள் அந்த அமைப்பு உங்களுக்கு தலைமை தாங்குகிறது.அதனால் எதைச்செய்தாலும் மக்களுக்கு சென்றடைகின்ற மாதிரி வேலைகளை செய்திருக்கிறோம்.


இன்றைக்கு காங்கிரஸை குறை கூறுபவர்கள் ஐந்து வருடங்களுக்கு முன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர்கள் தான். அன்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் எதிர்க்கட்சியில் இருந்தோம்.அன்று உங்களுக்காக ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை கோரினோம்.அதற்காக அன்று இருந்த அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லை. கம்பனிகளுக்கு அழுத்தமும் கொடுக்கவில்லை. அப்போது அழுத்தம் கொடுத்திருந்தால் இலவாக ஆயிரம் ரூபாவினை பெற்றிருக்கலாம் என நுவரெலியா மாவட்ட பொது பெரமுன வேட்பானரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் புளியாவத்தை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதி ஆனவுடன் ஆயிரம் ரூபாவை பெற்றுத்தர முன்வந்தார்.நாளைக்கு நீங்கள் சரி என்றாலும் உங்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம்.அதற்கான சகல ஏற்பாடுகளையும் கம்பனிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி ஏற்பாடு செய்துள்ளோம்.ஆனால் அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் தானே.இரண்டு கிலோ தேயிலையை மேலதிகமாக கேட்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் 100 ரூபாயை பெற்றுக்கொடுப்பதற்காக 88000 ரூபாய் இல்லாது போனது அதுபோல் நாங்கள் உங்களை காட்டிக்கொடுக்க தயாரில்லை. அதனால் தான் நாங்கள் ஒப்பந்தம் செய்யாததற்கு காரணம் ஆகும்.ஏனென்றால் இன்றைக்கு இரண்டு கிலோ என்று சொல்வார்கள் இன்னும் ஆறு மாதங்கள் கழித்து ஐந்து கிலோ அதிகமாக கேட்பார்கள்.அன்று தொண்டமான் ஐயா இருந்த நேரமும் சரி இன்று பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள் இருக்கும் போதும் சரி அவ்வாறு நாங்கள் உங்களை காட்டிக்கொடுக்க தயாராக இல்லை. மற்றவர்களும் சொன்னார்கள் தேர்தல் நேரம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுத்தால் வாக்குகளை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆனால் கஷ்டப்படும் உங்களை மேலும் மேலும் உங்களை கஷ்டப்படுத்த இடம் கொடுக்க கூடாது.1000 ரூபாயினை கூடிய விரைவில் பெற்றுக்கொடுப்போம்.  இ.தொ.கா உங்களுக்கு தலைமைத்துவம் தாங்குகிறது.அதனால் எதைச் செய்தாலும் பொறுப்பாக கடமையைச் நிச்சயமாக செய்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *