http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஊழல் மோசடி குறித்து விசாரணை இன்று ஆஜராக மாட்டேன் மஹேல ஜயவர்தன தெரிவிப்பு

விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில்  வாக்குமூலம்  வழங்குவதற்காக  மஹேல ஜயவர்தன இன்று ஆஜராக மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்காக அவர் வேறு  ஒரு தினத்தை ஆணைக்குழுவிடம் கோரியுள்ளார்.

விளையாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடி குறித்து ஆராயும் பொலிஸ் விசாரணைக் குழுவில் இன்று  காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மகிந்தானந்த அளுத்கமகே முன்வைத்துள்ள முறைபாட்டுக்கு அமைய,  கடந்த 2011 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு தலைவராக இருந்த அரவிந்த டி சில்வா இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க ஆகியோரிடம் ஆட்டநிர்ணயம் தொடர்பில் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *