இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,066 ஆக அதிகரிப்பு
நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,066 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை1,827 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று நோயாளிகளில் 228 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 11 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 58 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
