கொழும்பின் ஒரு பகுதி முடக்கம் : 143க்கும் மேற்பட்டோர் கட்டாய தனிமைப்படுத்தல்; மறுபடியும் சமூகத் தொற்றா?
அண்மையில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை நிறைவு செய்து பின் PC R பரிசோதனை இல் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு கொழும்பு – ஜிந்துபிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பியிருந்த அவர் அவரது வீட்டில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
பின்னர் அவருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, அந்த பகுதி தற்காலிமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 29 குடும்பங்களைச் சேர்ந்த 143 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று பகுதி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
