கடவுள் என்பவர் யார்?- ஆன்மிக கதை
துறவியோ அதைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அமைதி காத்தார். கேள்வி அவரின் காதில் விழவில்லை என்பதை அவரின் மவுனம் உணர்த்தியது. “”சுவாமி! நான் சொல்வது உங்களின் காதில் விழவில்லையா?” என சத்தமாக கத்தினான். இப்போது துறவி வாய் திறந்தார்.
“”கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேனே!” என்றார். இளைஞனுக்கு கோபம்.
“”வாயே திறக்கவில்லை! பதில் சொல்லியாச்சு என்கிறீர்களே! துறவி பொய் சொல்லலாமா?” என்று சற்று கோபமாகவே கேட்டான். “”மகனே! மவுனமே எனது பதில்” என்றார் துறவி.
இளைஞனோ,””இப்படி புதிர் போட்டு பேசினால் எப்படி புரியும்? தெளிவாகச் சொல்லுங்கள்,” என்றான்.
“”ஆன்மிகத்தின் ஒட்டுமொத்த பிழிவே மவுனம் தான். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் அவர். மவுனமாக தியானத்தில் ஆழ்ந்து விடும் நேரத்தில் மட்டுமே அவரோடு உறவாட முடியும்,” என்ற துறவி மீண்டும் மவுனத்தில் ஆழ்ந்தார்.

