http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரின் மினுவங்கொட வீட்டிலிருந்து பணம் உபகரணங்கள் மீட்டு.

இரசிகசிய பொலிஸாரினால் ஹெரோயின் போதை பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உதவி பொலிஸ் பரிசோதகரின் மினுவங்கொட வீட்டிலிருந்து ஒன்பது லட்சத்து 40000 பணமும் பல உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் போது ஹெரோயின் போதை பொருள் கடத்துவதற்கு உபயோகிக்கப்பட்ட கருதப்படும் மோட்டார் வாகனம் மோட்டார் சைக்கில்,கூரிய ஆயதம் உட்பட 4 கடன் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதாக அப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதுடன் அதற்கு மேலதிகமாக செட்லைட் தொலை பேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக குற்றத்தடுப்பு பிரிவில் மேலும் நான்கு உத்தியோகஸ்த்தர்களிடமிருந்து வாக்கு மூலங்களும் பெறப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்கள் போதை பொருள் கடத்துவதற்கு உதவியதற்காக 311 லட்சம் ரூபா பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *