http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கருணாவின் கூற்றைக் வைத்துக்கொண்டு நாட்டில் மீண்டும் இனவதத்தினை தூண்ட வேண்டாம். நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வைத்தியர் கே.ஆர் .கிசான் தெரிவித்தார்.

இன்று நாட்டில் ஒரு முக்கியப் பிரச்சினையாகக் காணப்படும் கருணாவின் கூற்று அது அவருக்கு நன்மை தருவதாக இருக்கலாம் அல்லது சர்வதேச ரீதியில் இவரை இப்படி கூற வைத்து இந்த நாட்டில் தமிழ் சிங்கள மக்களிடம் பிளவை ஏற்படுத்தும் ஒரு விடயமாக இருக்கலாம் அல்லது அரசியல் நன்மைக்காக ஒரு சில விஸம சக்திகளால் இவரை இப்படி கூறுங்கள் என்று கூறியிருக்கலாம் எதிர்க்கட்சியினர் இதன் பின்னணியில் இருக்களாம் இருந்தபோதும் இதில் பாதிக்கப்படபோவது பொதுமக்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.ஏனென்றால் சிங்கள தமிழ் மக்கள் இப்போதுள்ள இளைஞர் யுவதிகள் அனைவருமே இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழ்கின்றனர்..சிங்களமா தமிழா என்று மறந்திருக்கும் காலத்தில் நாங்கள் இலங்கையர் தான் என்று அனைவரும் இருக்கிறார்கள்.இத்தருணத்தில் இப்படி 3000 இராணுவத்தினரை நான்; கொன்றேன். என்று இவர் கூற்றை கூறுவது இது தமிழ் சிங்கள மக்களிடையே பிளவிளைவை ஏற்படுத்தும் அதே நேரத்தில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கையாக இருக்கலாம். நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வைத்தியர் கே.ஆர் .கிசான் தெரிவித்தார்..
ஹட்டன் டிக்கோயா பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆகையால் கருணா இதில் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் உண்மையில் இவர் செய்திருந்தால் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் இது சம்பந்தமாக சர்வதேச மனித உரிமை சபைகளுக்கும் இது சம்பந்தமாக எடுத்துச்செல்ல நாங்கள் தயங்க மாட்டோம்.ஏனென்றால் ராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பல வதந்திகள் பரப்பப்பட்டு இது ஐக்கிய நாட்டு சபையில் பேசப்பட்டு வருகின்றன.அந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராத காலகட்டத்தில் இப்படி இவர் கூறுவது இது ஒரு சூழ்ச்சியா என்பது சந்தேகமாக இருக்கின்றது. தமிழ்மக்கள் இவ்வளவுபேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையில் பேசப்பட்டு வருகின்ற போது இவர் இப்படி கூறுவது இரண்டையும் சமப்படுத்தும் நோக்கமா என ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது.ஆகையால் இதில் உண்மையான நிலையை அரசு அறிந்து இது உண்மையாக இருந்தால் இவருக்கு தராதரம் பாராது மரணதண்டனை வழங்கவும் தயங்கக்கூடாது என்பதனை இத்தருணத்தில் நாங்கள் கூற விரும்புகின்றோம்.ஏனென்றால் இவருக்கு பெரிய அரசியல் செல்வாக்கு இல்லை நினைப்பதுபோல் அங்கு மக்கள் செல்வாக்கும் இல்லை இத்தருணத்தில் அரசாங்கம் இவரை நம்பி சேர்த்து தேசிய பட்டியல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதே நேரத்தில் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் தருணத்தில் இப்படி ஒரு கூற்றை கூறுவது என்ன என்பது ஒரு பிரச்சினையாக இருக்கின்றது குழப்பமாக இருக்கின்றது.ஆகவே உடனடியாக அரசாங்கம் இது சம்பந்தமான விசாரணையை நடத்தி மக்களுக்கு இதை தெளிவுபடுத்த வேண்டும்.ஏன் இவர் கூறினார் இவர் பின்னணியில் இருப்பது யார் ஆளுங்கட்சியா எதிர்க்கட்சியா அல்லது சர்வதேசமா என்பது எங்களுக்கு தெரிய வேண்டும் என்பதை இத்தருணத்தில் நாங்கள் கூற விரும்புகின்றோம்.இதை சட்டநடவடிக்கை எடுக்கும்படி எதிர்வரும் ஜெனீவா மாநாட்டுக்கு கொண்டுசெல்லவும் நாங்கள் தயங்கமாட்டோம் என்பதனை கூறவிரும்புகிறோம்.அதே நேரத்தில் விசேடமாக இந்த சம்பளப்பிரச்சினை 2015ம் ஆண்டில் இருந்து இந்த மக்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு தருவதாக கூறி மைத்ரிபால சிறிசேன அவர் ஜனாதிபதியாகி அவர் சென்றுவிட்டார்.அதன் பிறகு ரணில் விக்கரமசிங்க அவர்களும் சம்பளப்பிரச்சினையை தான் கொண்டு வந்தார் அவர் 1500 ரூபா பெற்றுத்தருகிறேன் என்றார் அதன் பிறகு சஜித் பிரேமதாச அவர்களும் 1500 ரூபா பெற்றுத்தருகிறேன் என்று சென்ற ஜனாதிபதித் தேர்தலில் இது தான் மும்முரமாக பேசப்பட்டது.அதன் பிறகு தற்போது எமது ஜனாதிபதி அவர் பதவிக்கு வந்தவுடன் உடனடியாக இந்த மக்களுக்கு 1000ரூபா பெற்றுத்தருவதாக பேசினார் ஆனால் இது இன்று போய் நாளைவா என்பது போலத்தான் இருக்கின்றது .ஆகவே இந்த விடயத்தில் பேச்சுவார்த்தையை விட உடனடியாக சம்பளஉயர்வைப்பெற்றத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாங்கள் கூற விரும்புகின்றோம்.இத்தருணத்திலும் மக்கள் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கின்றது என்று எதிர்ப்பாரத்துக்கொண்டிருக்கின்றனர்.ஒவ்வொரு முறையும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரபல அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று தான் கூறுகின்றனர்.என்ன பேச்சுவாரத்தை நடந்து கொண்டிருக்கிறது 2015 ம் ஆண்டில் இருந்து இந்த பேச்சுவார்த்தையினை நடத்திக்கொண்டு தான் இருக்கின்றனர்.மற்யை பகுதிகளை எடுத்துக்கொண்டால் பிரத்தியேக தொழிற்சாலைகளை எடுத்துக்கொண்டாலும் சரி அரசதுறையினரை எடுத்துக்கொண்டாலும் சரி அவர்கள் வேலைநிறுத்தம் செய்தவுடன் சம்பளம் வழங்கப்படுகிறது.ஆனால் தோட்டத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தாலும் உண்ணாவிரதம் செய்தாலும் இந்த சம்பள உயர்வு வழங்கப்படுவதில்லை.அரச துறையை பொறுத்தவரையில் 51 வீதம் அரசாங்கத்திற்கும் 49 வீதம் பிரத்தியேக கம்பனிகளுக்கும் இருக்கின்றன.தற்போது தேயிலை விலை அதிகரித்துள்ள போதிலும் சம்பள உயர்வு வழங்கப்படுவதில்லை.ஆகவே ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்துவதைவிட உடனடியாக சம்பளம் கொடுப்பதென்றால் இவர்களுக்கு கொடுக்கமுடியும் ஜனாதிபதிக்கு அவரின் அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக கொடுக்கமுடியும் மத்திய வங்கியை உடனடியாக செயற்படுத்தியவர் ஜனாதிபதி அவர்கள். ஏனிந்த மலையக மக்களின் சம்பள உயர்வை வழங்க முடியாது என்பதே எங்களது கோரிக்கையாக இருக்கின்றது.ஆகையால் இந்த தேர்தலில் நாங்கள் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு மூலமாக இ;ந்த மக்களுக்கு மாத சம்பளம் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம்.அதேபோல் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு பத்தாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு மேல் வேலையில்லாமல் இருக்கின்றனர்.இவர்களுக்கு அரசிலும் சரி தனியார் துறையிலும் சரி பல வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும் பல தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும் மலையகத்தில் இன்று அரசாங்கத்தாலோ தனியார் கம்பனிகளாலோ அமைக்கப்பட்ட தொழிற்சாலைகள் குறைவாக இருக்கின்றது.அரசாங்க வைத்தியசாலைகள் பாடசாலைகள் என்பன அதிகமாக இருக்கின்றன இருந்த போதிலும் இந்த வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க அரசு தவறியுள்ளது.ஆகவே தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் பிரதானமாக முன்வைப்பது இந்த இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு, தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை அதேபோல் வீடமைப்பு அனைவரைக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே எமது நோக்கமாக இருக்கின்றது.அதே போல் ஒவ்வொருமுறையும் பேச்சுவாரத்தை நடந்து கொண்டிருக்கின்றது சம்பள உயர்வு வரும் என்று கூறிக்கொண்டிருக்காமல் இதற்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *