ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 128 ஆவது ஸ்தாபகர் தினம்
அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் 128 ஆவது ஆண்டு “ஸ்தாபகர் தினம்” இன்று திங்கட்கிழமை (29) காலை 9.30 மணிக்கு பாடசாலை மட்டத்தில் அதிபர் ஆர். ஸ்ரீதர் தலைமையில் எளிமையாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரியின் முன்னைநாள் பீடாதிபதி சிவ. இராஜேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். ஆசிரியர்களின் தொழில் வாண்மையை ஊக்குவித்தல் மற்றும் “கொரோனா” காரணமாக 105 நாட்கள் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையில் காணப்படும் நீண்ட இடைவெளியை போக்கும் வகையில் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மாணவர்களை தாயர்ப்படுத்தல் முதலான விடயங்கள் பற்றி அவர் உரை நிகழ்த்துவார்.
“கொரோனா” காரணமாக கல்லூரி சுமார் மூன்று காலம் மூடப்பட்டிருந்ததால் இம்முறை ஸ்தாபகர் தினத்துடன் கூடிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவை நடத்த முடியாமல் போனதாகவும், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியின் அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்போடு “ஸ்தாபகர் தினத்தை” மாத்திரம் அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிபர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
