http://ceylononline.lk/

Ceylon Online News Portal

செல்வந்தர்கள் நுவரெலியா மாவட்ட வாக்குகளை சூரையாடுகின்றனர். நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் அமைப்பாளரும் வேட்பாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் .
மலையக மக்களை பொருத்த வரையில் மிகவும் போராட்டத்திற்கு மத்தியிலேயே வாக்குரிமையினை பெற்றுக்கொண்டுள்ளனர்.மலையகத்தில் வசிப்பிடமாகவோ இல்லாத தொழிற்சங்க காரியாலயமோ,அலுவலகமோ இல்லாத இன்று பணம் படைத்த ஒரு சிலர் சாரயத்தையும் சோற்றையும் வாங்கி கொடுத்து நுவரெலியா மாவட்டத்தின் வாக்குகளை சூரையாடுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் வேட்பாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று (24) ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பி போது தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகத்திற்கே சம்பந்தமில்லா சிலர் கொழும்பிலிருந்தும் கண்டியிலிருந்தம் வருகை தந்து நுவரெலியா மவாட்டத்தில் வாக்கு கேட்கின்றனர்.அவர்களால் இந்த மக்களின் உண்மையான நிலையினை புறிந்து கொள்ள முடியாது. இது மக்களை ஏமாற்றுவதற்காகவே தேர்தல் காலங்களில் பணத்தினை அள்ளி இறைத்து வாக்குகளை சூரையாடுகின்றனர். என எமது மக்கள் விழிபாக இருக்க வேண்டும்.அதே நேரம் இன்று கரணா அம்மன் சொல்லிய ஒரு கூற்றினை வைத்துக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனவாதத்தினை தூண்டுவதற்கு முயற்சி செய்துவருகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சிறுபான்மை மக்களை அரவணைத்து சென்ற சஜித் பிரேமதாச அவர்கள் இன்று இனவாதத்தினை கக்கி அதனூடாக சிங்கள் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்.இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்த காலத்தில் கருணா அம்மன் குற்றம் செய்திருந்தாலும் கூட யுத்தத்தினை நிறைவு செய்வதற்கு பாரிய அளவில் அரசாங்த்திற்கு ஒத்ததுழைப்பு நல்கியிருக்க்றார்.யுத்த காலத்தில் ரானுவத்தினர் புலிகளை மற்றுமன்றி பொது மக்களையும் சுற்றுக்கொண்டுள்ளனர். அப்படி என்றால் சஜித்வுடன் இருக்கும் பொன்சேகா அவர்களையும் கைது செய்ய வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
கருணா அம்மன் இந்த பிரதி அமைச்சராகவும் இருற்துள்ளார். அப்போது குற்றவாளியாக தெரியாத கருணா இப்போது மாத்திரம் எப்படி குற்றவாளியாவார் என அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *