http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நுவரெலியா மாவட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்றால் அது ஜனாதிபதி கோட்டபாய அரசாங்கத்திலேயே ஏற்படும் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவிப்பு

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் 
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை காலமும் பல துறைகள் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.கல்வியை எடுத்துக்கொண்டாலும் சமூகத்துக்கு ஏற்ற மாற்றங்கள் அதன் மூலம் ஏற்படவில்லை. சுகாதாரத்தை எடுத்துக்கொண்டாலும் வைத்தியசாலைகளில் அடிப்படை வசதிகள் இன்றியே காணப்படுகின்றன. தொழில் வாய்ப்புக்கள் இல்லாது இளைஞர் யுவதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.இளைஞர் யுவதிகள் வேறு மாவட்டங்களையும் நோக்கி சென்று தொழில்வாய்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அவர்களும் இடர்படுகின்றனர் அவர்களின் குடும்பங்களும் இடர்படுகின்றனர்.மலையப்பகுதிகளில் தொழில்பேட்டைகளை உருவாக்கியிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது ஜனாதிபதி கோட்டபாய அவர்கள் புதிய சிந்தனையுடன் நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடியவர். எனவே நுவரெலியா மாவட்டத்தில் மாற்றம் ஒன்று ஏற்படவேண்டும.; என்றால் அது கோத்தபாய அரசாங்கத்திலேயே என நுவரெலியா மாவட்ட பொது பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபாகரன் இன்று 23.06.2020 தலவாக்கலை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று நுவரெலியா மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் பல வீதிகள் இன்னமும் குன்று குழியுமாகத்தான் இருக்கின்றன.தொழிலாளர்களின் வீடுகளை எடுத்துக்கொண்டால் அதே நிலை தான் காணப்படுகின்றன. கடந்த அரசாங்கம் வீடுகளை கட்டிக்கொடுத்தது அது நல்ல விடயம் ஆனால் நாலரை வருட காலப்பகுதியில் 1900 வீடுகள் தான் கட்டிக்கொடுத்துள்ளது.மேலும் நாலாயிரம் வீடுகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலேயே உள்ளன.
2000 வீடுகள் கட்டுவதற்கு ஐந்து வருடம் எடுத்தால் 10000 வீடுகள் கட்டுவதற்கு 25 வருடமாவுது சென்றிருக்கும் அதே நேரம் இங்குள்ள அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்கும் போது நாம் உயிரோடு இருப்போமா?இல்லையா? என்று கூட தெரியாது ஆகவே மலையக வீடமைப்பு ஜனாதிபதியின் கைகளில் தான் இருக்க வேண்டும் அப்போது எமது மக்களுக்கு மிக விரைவில் வீடுகள் கிடைக்கும் உங்களுக்கு தெரியும் கடந்த காலங்களில் ஜனாதிபதி பல மாடி வீடுகளை கட்டி கொழும்பிலுள்ளவர்களுக்கு பெற்றுக்கொடுத்தார் அதே போல் மலையக மக்களுக்கும் அவர் பெற்றுக்கொடுப்பார்.கடந்த அரசாங்கம் மலையகப்பகுதியில் பாரியளவில் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ளவில்லை. என்று தான் கூற வேண்டும். எவருக்கும் தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுக்கவில்லை.எனவே எமது இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பின்றி கொழும்பிழும் பிற நகரங்களிலும் வேலை செய்து வருகின்றனர்.
அரசாங்கம் நினைத்திருந்தால் இங்கு பல தொழிற்சாலைகளை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்திருக்கலாம் ஆனால் ஏன் செய்யவில்லை என்று தெரியாது.
இந்த தேர்தலில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களும் தான் வெற்றி பெறுவார்கள் அதனை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பாரிய அளவில் அபிவிருத்திகளை காண முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *