http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வெலிசறை கடற்படை முகாம் இன்று முதல் திறக்கப்படுகிறது.

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த வெலிசரை கடற்படை முகாம் இன்று (23) முதல் கட்டம் கட்டமாக திறக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான 29 கடற்படையினர் இனங்காணப்பட்டனர்.அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரேல் 27 ம் திகதி கடற்படை முகாம் தற்காலிகமாக மூடப்பட்டன.
கோவிட் 19 தொற்று காரணமாக கடற்படை சிப்பாய்கள் 998 பேர் பாதிப்புக்குள்ளாகியதுடன் அதில் 785 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் 113 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்றும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்பே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாது காப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *