http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கிணற்றுக்குள் தவறிவிழுந்த சிறுவன் பலி! முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு – தேவிபுரம் (அ) பகுதியில் கிணற்றுக்குள் தவறிவிழுந்த சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த தேவிபுரம் (அ) பகுதியை சேர்ந்த வினுஜன் ( வயது 11) என்னும் சிறுவனே இன்று உயிரிழந்துள்ளார்.

வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என உறவினர்கள் தேடி சென்றபோது கிணற்றுக்குள் சிறுவனின் சடலம் காணப்பட்டது.

இந்நிலையில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *