http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக விசேடத்துவ வைத்தியர் அநுருத்த பாதெனிய தெரிவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக விசேடத்துவ வைத்தியர் அநுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக தேர்வு நேற்று சனிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள நிபுணத்துவ தொழிற்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது சங்கத்தின் தலைவராக விசேடத்துவ வைத்தியர் அநுருத்த பாதெனிய தெரிவு செய்யப்பட்டார்.

வைத்தியர் அநுருத்த பாதெனிய இந்த பதவிக்கு தொடர்ந்து 10ஆவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டிருப்பது விசேட அம்சமாகும். தலைவர் பதவிக்கு வைத்தியர் அநுருத்த பாதெனிய போட்டியின்றியே தெரிவு செய்யப்பட்டார்.

அதேபோன்று சங்கத்தின் செயலாளராக வைத்தியர் செனால் பெர்ணாந்துவும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் செயலாளராக இருந்த வைத்தியர் ஹரித்த அளுத்கே சங்கத்தின் செப்பனிடல் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *