http://ceylononline.lk/

Ceylon Online News Portal

தெற்கு அதிவேக பாதையில் விபத்து 09 பேர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதி.

தெற்கு அதிவேக பாதையில் பத்தேகம மற்றும் பின்னதுவ பிரவேசிக்கும் வீதிக்கு இடையில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒன்பது பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர்களில் மூன்று நிலை கவலைக்கிடமானது என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலிருந்து காலி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று வேன் ஒன்றினை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் வேனுடன் மோதி அதனை தொடர்ந்து பாதுகாப்பு வேலியில் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *