http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பொது பெரமுன முன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற வேண்டும் என்றால்.ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி தேர்தலில் இருந்து வாபஸ் பெறவேண்டும் நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் அமைப்பாளரும் வேட்பாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொது பெரமுன கட்சியும் கடந்த காலங்களில் பல்வேறு பேச்சு வார்த்தையின் அடிப்பமையில் தான் ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கு ஆதரவு வழங்கியது. அதன் அடிப்படையில் அவர் வெற்றியும் பெற்றார்.இந்த தேர்தலிலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொது பெரமுனவுடம் இணைந்து தான் சகல மாவட்டங்களிலும் போட்டியிடுகிறது இந்நிலையில் பிரசன்ன ரணதுங்கள் அவர்கள் ஸ்ரீலங்கா சுதத்திர கட்சியின் தலைவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென என்ற கருத்தினை நாங்கள் முற்றும் முழுவதுமாக நிராகரிக்கிறோம். ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அவர்கள் மேற்கொண்டுள்ள முட்டாள் தனமான செயப்பாட்டினால் இன்று பொது பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை இல்லாது போகும் நிலைமை உருவாகியிருப்பதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கை சினன்த்தில் போட்டியிட்டு வெற்றி முடியாது. எனவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் போட்டியிடுவதிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என நுவரெலியா மவாட்ட ஸ்ரீ லங்கா கட்சியின் அமைப்பாளரும் வேட்பாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
இன்று (28) திகதி ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் தேர்தலில் போட்டியிடும் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் உள்ள பல முக்கிய அமைச்சர் கோட்டபாய அவர்களை பெற்றிப்பெற செய்ய வேண்டும். என்பதற்காக நூற்றுக்கு 10 வீதம்,20,வீதம்,30 வீதம்,என்ற அடிப்படையில் பேச்சு வார்த்தைக்கு பின் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே ஆதரவு வழங்கினார்கள.; ஆனால் இன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களும் பிரதமர் அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்யினை பாதுகாக்க தான் செயப்படுகிறார்கள் அவர்களுக்கிடையில் எவ்வித முறண்பாடுகளும் இல்லை.அவர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியினை கட்டிக்காக்க வேண்டும். என்ற கொள்கையிலேயே இருக்கின்றார்கள்.இது இவ்வாறு இருக்கும் போது தனிநபராக இருந்து கொண்டு ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியினை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது..அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியில் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டு அதிகாரங்களை பெற்றுக்கொண்டு இப்போது இவ்வாறு கூறுவது எந்த வகையில் நியாயம் என நான் அவரிடம் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்..இப்போது நடைபெறுகின்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் பொது பெரமுனவும் இணைந்து தான் போட்டியிடுகிறது இதற்கமைய கட்சியின் தலைவர் மைத்திரபால சிறிசேன அவர்கள் பொலன்நறுவையிலும் பொதுச் செயலாளர் குருணாகல் மாவட்டத்திலும்; தேசிய அமைப்பாளர் அனுராதபுர மாவட்டத்திலும் போட்டியிடும் நிலையில் ஸ்ரீ லங்கா சுத்திரகட்சியினை விமர்சிப்பதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியும் பொது பெறமுனவும் இணைந்தால் இந்த தேர்தலில் மூன்றில் இரண்டும் பெரும்பான்;மையினை பெற முடியும்.இது இவ்வாறிருக்கு இந்த உடன் படிக்கையின் அடிபடையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொது பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுகிறது.இந்நிலையில் தயசிறி ஜயசேகர அவரக்ளின் முட்டாள்தனமான செயப்பாடுகள் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் பல மாவட்டங்களில் போட்டியிடுகிறது.இது எந்த வகையில் நியாயமானது.ஒரு பக்கம் உடன் படிக்கை கைச்சாத்திட்டுயிருக்கின்றோம் பொது ஜன பெரமுனவோடு மற்றொரு பக்கம் கை சின்னத்தில் போட்டியிடுகின்றோம். ஆகவே இந்த கை சின்னத்தில் போட்டியிடுபவர்கள் நிச்சயம் தோழ்வியடையதான் ;போகிறார்கள் ஆகவே கை சின்னத்தில் போட்டியிடுபவர்கள். விலகி பொது பெரமுனவிற்கு ஆதரவு வழங்க முன்வர வேண்டும்.இன்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பாக பலர் பேசுகிறார்கள் ஆயிரம் ரூபா சம்பள விடயத்தினை முதலில் ஆரம்பித்தது ஐக்கிய தேசிய கட்சியினர். அதனை தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தருகிறோம். என்று பலர் அரசியல் மேடையில் பேசி வருகிறார்கள். அவர்களிடம் ஒன்றை மாத்திரம் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.ஆயிரம் ரூபா சம்பளத்தினை காட்டி தொழிலாளர்களின் வாக்குகளை சூரையாட வேண்டாம் இன்று தோட்டத்தில் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாதவர்கள் கூட அதைபற்றி தான் பேசுகிறார்கள்.அவர்களுக்கு தெரியுமா? தோட்டத்தொழிலாளியின் நாட்சம்பளம் எவ்வளவு என்று எவ்வாறு அவர்களுக்கு சம்பளம் கணிக்கப்படுகின்றது.என்று ஆகவே தொழிலாளகளிடம் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன் இவ்வாறு பொய் கூறி கூறி உங்களை ஏமாற்றுபவர்களை நம்ப வேணடாம்; இன்று நீங்கள் மாதாந்தம் வழங்கும் 150 ரூபா 250 ரூபா என சந்த பணம் செலுத்துகிறீர்கள் இந்த சந்தாபணம் வருடம் ஒன்றுக்கு 2000 ரூபா தொடக்கம் 3000 ரூபா வரை செலுத்துகீறீர்கள். நீங்கள் வியர்வையில் உழைத்;த பணத்தினை கோடிக்கணக்கில் சந்தாவாக பெற்றுக்கொண்டு விஸ்கி பிராந்தி கொக்கேன் என அருந்தி விட்டு பலர் நாடாளுமன்றம் சென்ற என்ன கதைப்பதென்று தெரியாமல் நிலை தடுமாறி நின்றுள்ளார்கள் ஆகவே இனி வரும் காலங்களில் ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுத்தரும் வரை எவருக்கு சந்த பணம் செலுத்துவதை நிறுத்தி விட்டு ஆயிரம் சம்பளம் பெற்றுத்தர வீதியிரங்கி போராடா வேண்டும.; என கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *