http://ceylononline.lk/

Ceylon Online News Portal

105 நாட்டகளுக்கு பின் பாடசாலைகள் நாளை ஆரம்பம்.

கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (29) திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்கள் சுகாதார துறைப்பணிப்பாளர் அனில் ஜயசிங்க மற்றும் மாவட்ட சுகதார பிரிவினர் கல்வி அதிகாரிகள் செயலாளர்கள் உள்ளிட்ட பலருடன் நடைபெற்ற பல கட்ட கலந்துரையாடலினை தொடர்ந்து. பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இதற்கமை முதற் கட்டமாக க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரத்தினையும் அதனை தொடர்ந்து ஏனைய வகுப்புகளும் திறக்கப்படவுள்ளன.
நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் நாளை தினம் பாடசாலைக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. நாளை ஆசிரியர்களும் அதிபர்களும் பாடசாலை உதவியாளர்களும்; மாத்திரம் சமூகம் தந்து பாடசாலைகளை சுத்தப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தியதன் பின்னரே அடுத்த வாரம் மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *