இரகசிய தகவலின் அடிப்படையில் வன்னி பிரதிபொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் கீழ் இரு இளைஞர்கள் கைது
வவுனியா – நெளுக்குளம் பகுதிகளில் கஞ்சாவுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை வவுனியா நெளுக்குளத்தில் இருவேறு பகுதிகளில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வன்னி பிரதிபொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் கீழ் செயல்படும் மது ஒழிப்புப்பிரிவு பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது குறித்த இரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, தோணிக்கல் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞனையும் அவரிடமிருந்து 1200 மில்லிகிராம் கஞ்சாவினையும், உக்குளாங்குளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞனையும் அவரிடமிருந்து 1300 மில்லிகிராம் கஞ்சாவினையும் மீட்ப பொலிஸார், இரு இளைஞர்களையும் கைது செய்த பொலிஸார் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்களிற்கு எவ்வாறு கஞ்சா கிடைக்கப்பெற்றது, எங்கிருந்து கொண்டுவந்தார்கள் என்ற அடிப்படையில் விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
