http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மஸ்கெலியா லங்காவத்த தொடர் தோட்டக்குடியிருப்பில் தீ ஒரு வீடு முற்றாக சேதம் 05 பேர் நிர்கதி

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா லங்கா வத்த தோட்டத்தில் இன்று (27 ) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் இந்த வீட்டில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் அயலில் உள்ள வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தீப்பரவலுக்கான காரணங்கள் கண்டறியப்படாத போதிலும் மின்சார ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
தீப்பரவல் ஏற்பட்டு உடன் சம்பவ இடத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸஸின் பொதுச் செயலாளரும் வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் மற்றும் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவி செம்பகவள்ளி உட்பட இ.தொ. காவின் முக்கியஸத்தர்கள் சென்று பார்வையிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை தோட்ட நிர்வாகத்துடன் பேசி பெற்றுத்தர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *