http://ceylononline.lk/

Ceylon Online News Portal

நாய்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி

குருநாகல், கலேவெல அலுத்வெவ பிரதேசத்தில் செல்லப்பிரணிகளாக வளர்க்கப்பட்ட 12 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு இறந்த நாய்கள் வீட்டு செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் இறந்து கிடந்துள்ளன. நாய்களின் வாயில் இருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதாக, அப்பகுதி பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்த நாய்களின் உரிமையாளர்களை விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கலவேல பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளன

முன்பு இவ்வாறு கோழி, நாய் போன்ற விலங்குகளும் குறித்த நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், விஷம் வைக்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மேற்படி சம்பவம் குறித்து கலேவெல பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *