http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொட்டகலையின் பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

கொட்டகலை பிரதேச சபையின் 2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பிரதேசபையின் தலைவர் ராஜமணி பிரசாத்தலைமையில் இன்று (01) திகதி பிரதேச சபைக்கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. இதில் அமோகமான ஆதரவுடன் குறித்த வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதாக கொட்டகலை பிரதேசசபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது இன்று 16 அங்கத்தவர்களில் 15 பேர் சமூகம் தந்ததாகவும் வருகை தந்த 15 பேரும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும்.


குறித்த வரவு செலவு திட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தொழிகளை இழந்து வீடு திரும்பியுள்ள இளைஞர் யுவதிகள்,மற்றும்; தொழிலின்றி உள்ள இளைஞர் யுவதிகளை கருத்தில் கொண்டு சுயதொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பிரதேசத்தின் பாதை குடிநீர்,திட்டங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும்,

குப்பை மீள் சுழற்சி செய்து வருமானம் பெறுவதற்கான திட்டம் ஒன்றினை முன்வைத்துள்ளதாகவும் டெவோன் சென்கிளையார் போன்ற நீர் வீழ்ச்சிகளை மையப்படுத்தி உள்நாட்டு வெளி நாட்டு சுற்றுலா பிரயாணிகள் கவரும் வண்ணம் பல தி;ட்டங்களை முன்னெடுத்து தொழில்வாய்ப்புக்களை உருவாக்க உள்ளதாகவும் இன்னும் மக்கள் நலம் சார்ந்த பல திட்டங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *