http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹில்வுட் பகுதியில் முச்சக்கர வண்டி 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து. இருவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதி

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்;டன் கொழும்பு பிரதான வீதியில் வூட்லண்ட் பசார் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ்; செய்த இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று 24 திகதி பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஸ்ரதன் பகுதியிலிருந்து தேயிலை தூள் ஏற்றிச் கொண்டு மஹரகம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது குறித்த முச்சக்கரவண்டி பாதுகாப்பு கல்லினையும் உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


இச்சம்பவத்தில் ஏற்படும் போது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் முச்சக்கரவண்டியில் இருந்தாகவும் அவர்களை பிரதேசவாசிகள் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இவ்விபத்து முச்சக்கரவண்டியின் சாரதிக்கு வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்டிருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *