http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வறிய நிலையில் உள்ள 10 லட்சம் குடும்பங்களின் வீட்டு பொருளாதாரத்தினை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை.

நாட்டில் வாழும் சுமார் 10 லட்சம் வறிய குடும்பங்களை இலக்காக கொண்டு அவர்களின் பொருளாதாரத்தினை ஊக்குவிப்பதற்காக 10 லட்சம் வீட்டு அலகுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நாடாளவிய ரீதியில் வறிய குடும்பங்களுக்கு வீட்டு தோட்டம் செய்வதற்காக மரக்கறிகன்று நாடாளவிய ரீதியில் கிராம சேவகர் பரிவுகள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் ஹட்டன் தெற்கு கிராம சேவகர் பிரிவில் சமூர்த்தி உதவி நிவாரணம் பெறும்,தெரிய செய்யப்பட்ட 2500 வறிய குடும்பங்களுக்கு மரக்கறி கன்றுகள் பெற்றுக்கொடுக்கும் ஆரம்ப நிகழ்வு கிராமசேவகர் ஜி.; சுவர்ணலதா தலைமையில் இன்று (24) இடம்பெற்றன.


இதன்போது கத்தரி,மிளகாய்,கோவா,தக்காளி,உள்ளிட்டு பல மரக்கறி கன்றுகள் இதன் போது பெற்றுக்கொடுக்கப்பட்டன.


இதன் போது வீட்டுத்தோட்டம் செய்து தமது வாழ்தாரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் விளக்கமனிக்கப்பட்டதுடன் வீட்டு தோட்டம் செய்வது தொடர்பாக அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வுக்கு ஹட்டன் வலயக்கல்வி பணிமனையின் விவசாய பாட ஆசிரிய ஆலோசகர் மைக்கல் செபஸ்தியன். சுமூரத்தி அபிவிருத்தி உத்யோகஸத்தர் பிரையன் பெரேரா உட்பட விவசாயத்திணைக்களத்தின் உத்தியோகஸத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *