http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் ஆயிரம்ரூபா பெற்று கொடுக்க முடியாது போனது கடந்த அரசாங்கம் ஆதரவு வழங்காமையே. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலின் போது ஒரு லட்சம் கிலோ மீற்றர் பாதைகள் காபட் பாதையாக அபிவிருத்தி செய்யப்படும் என்று கூறினார் அதற்கு அமைய நாடு பூராகவும் 164 பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றன. அதில் ஒரு பாதை தான் இந்த பாதை. அதே போன்று உங்களுக்கு தெரியும் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருக்கின்ற போது மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருக்கின்ற போது மலையகத்திலே பாரிய அபிவிருத்தி  திட்டங்களை உருவாக்கினார் அதன் பிறகு வந்த நல்லாட்சி அரசாங்கம் அந்த அபிவிருத்தி திட்டங்கள் அத்தனையும் நிறுத்தின.
மீண்டும் எங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது ஜனாதிபதி கோட்டபாய அரசாங்கத்திலே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் தலைமையிலே அன்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மலையகத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அந்த வேலைத்திட்டங்கள் அத்தனையும் இன்று ஜீவன் தொண்டமான் தலைமையில் நிறைவேற்றுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கடந்த காலங்களில் பல தோட்ட பாதைகள் அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைத்தோம் மக்களுக்கு இருந்த பிரச்சினை ஆயிரம் ரூபா பிரச்சினை. ஆயிரம் ரூபா தருவதாக கூறியது நாங்கள் அல்ல நல்லாட்சி அரசாங்கம் வந்தவுடன் ஆயிரம் ரூபா தருவதாக கூறினார்கள். நாலரை வருடங்கள் சென்றது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் பெருந்தோட்ட கம்பனிகளுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை அவர்கள் கூறிய ஐம்பது ரூபாவை கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
நாங்கள்  ஜீவன் தொண்டமானின் தலைமையிலே ஆட்சி அமைத்தவுடன் பல தடைவைகள் கம்பனிகளிடம் பேசினோம் அதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் பல காரணங்களை கூறினார்கள் அதனை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் தெரிவித்தோம் இன்று பிரதமர் நாட்டின் நிதி அமைச்சர் என்ற வகையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார் இதனை ஆளும் கட்சியினை விட எதிர்கட்சிகள் அதிகமாக பேசினார்கள் ஆனால் கம்பனிகள் இயங்கவில்லை எப்படி கொடுப்பீர்கள் என்றார்கள் ஆனால் அதனை வாங்க கூடிய சக்தி எங்களிடம் இருக்கிறது எனவே தான் ஆயிரம் ரூபா தருகிறோம் என்று தெரிவித்தோம்.
ஆனால் இன்று இது தொடர்பாக பேசுகின்றவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்துள்ளார்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளார்கள். அவர்களால் ஆயிரம்   ரூபாவையும் வாங்கி கொடுக்க முடியவில்லை கூறிய ஐம்பது ரூபாவினையும் வாங்கி கொடுக்க முடியவில்லை. ஆகவே நிச்சயமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உங்களுக்கு ஆயிரம் ரூபாவினை பெற்றுக்கொடுக்கும்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மலையகத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார் இன்று வரவு  செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அன்று பேசிக்கொண்டிருக்கும் போது நுவரெலியாவில் தமிழ் சிங்கள முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றன இங்கு ஒரு மும்மொழி பாடசாலை வந்தால் நல்லாயிருக்கும் என்றார் கல்வி அமைச்சருடன் பேசினோம் நானுஓயாவில் அதனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் பாராளுமன்றத்திற்கு யாரையும் குறைகூறுவதற்கு போகவில்லை எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை பெற்றுக்கொடுக்கவே சென்றிருக்கிறோம்.
கடந்த காலங்களில் உங்களுக்கு தெரியும் ஒரு பாதை எட்டு கிலோ மீற்றர் இருந்தால் அதில் ரெண்டு ரெண்டு கிலோ மீற்றர் அங்க கொஞ்சம் இங்கு கொஞ்சம் என்று தான் போட்டுக்கொண்டு வந்தார்கள் ஆனால் நாங்கள் அப்படியல்ல எட்டு கிலோ மீற்றர் இருந்தால் எட்டு கிலோமீற்றரையும் போடுவோம். எந்தெந்த தோட்டப்பாதைகளை ஆரம்பிக்கிறோமோ அதனை முழுமையாக போட்டு முடிப்போம். உங்களுக்கு தெரியும் ஆறுமுகன் தொண்டமான் கல்வி அமைச்சருடன் பேசி மலையகத்திற்கு உதவி ஆசிரியர்களை பெற்றுக்கொடுத்தார் அவர்கள் இரண்டு வருடத்தில் பயிற்சி பெற வேண்டும் அதற்கு பிறகு நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஆனால் நாலரை வருடமாகியும் அவர்களை நிரந்தரமாக்க முடியவில்லை ஆனால் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கல்வி அமைச்சருடன் பேசி அவர்களை நிரந்தமாக்கியுள்ளார் இப்போது என்ன கூறுகிறார்கள் என்றால் எதனையும் எடுத்தாலும் நாங்கள் செய்ய தான் இருந்தோம் அவர்கள் செய்து விட்டார்கள் என்று அப்படி என்றால் கடந்த நாலரை வருடத்தில் செய்திருக்கிறது இப்போது புதிதாக ஒன்றினை கண்டுபிடித்திருக்கிறார்கள் தோட்டத்திற்கு என்று நிதி ஒதுக்கவில்லையாம் தோட்டத்திற்கு என்று நிதி ஒதுக்கவேண்டிய அவசியமில்லை மலையகம் தோட்டம் எல்லாமே இந்த நாட்டில் தான் இருக்கிறது ஆகவே நாங்கள் அமைச்சு எடுத்த ஒரு சில மாதங்களிலேயே பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம் எனவே காங்கிரஸ்pனை பலப்படுத்துங்கள் உங்களுக்கு தேவையான அத்தனையும் நாங்கள் செய்து தருவோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *