கூட்டு ஒப்பந்தம் இருப்பதால் தான் ஆயிரம் ரூபா வாங்கிகொடுக்க முடியவில்லை. என்று தெரிவிப்பவர்கள் ஏன் ஒவ்வொரு தேர்தலிலும் ஆயிரம் ரூபா வாங்கி தருவதாக கூற வேண்டும் ஜீவன் கேள்வி.
உங்களுக்கு தெரியும் அண்மையில் பாராளுமன்றத்தில் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று எதிர் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் கடந்த காலங்களில் இந்த வாயே தான் சொன்னது நியாயமான சம்பளம் பெற்றுத்தர வேண்டும் என்று. இன்னு ஒரு சிலர் கூறினார்கள் கூட்டு ஒப்பந்தம் இருப்பதால் எங்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. என்று. அப்படி என்றால் ஏன் ஒவ்வொரு தேர்தலிலும் வந்து ஆயிரம் ரூபா பெற்றுத்தருவதாக தெரிவிக்க வேண்டும். என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்ட வசதிகள் அபிவிருத்தி ராஜங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியா தொலைநோக்கு மற்றும் ஒரு லட்சம் கிராமிய பாதைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகிணங்க நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்சன் பர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் நிமல் லன்சா அவர்களின் வழிகாட்டலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் அவர்களின் பங்களிப்பில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியினை இணைக்கும் கிரிலஸ்பாம் வீதி 4..45 கிலோமீற்றர் தூரமான பாதை சுமார் 80 மில்லியன் ரூபா செலவில் குறித்த பாதையின் அபிவிருத்தி பணிகள் இன்று (22) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில்..நாங்கள் தேர்தல் காலத்தில் தெரிவித்தோம். வீட்டை விட இந்த பிரதேசத்திற்கு செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் இருந்ததனால் அதனை முதலில் செய்து தருவதாக அதே போல் இன்று அதனை ஆரம்பித்து வைத்துள்ளோம். ஒரு சில எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் சொல்கிறார்களாம். இவர்கள் அடிக்கல் நாட்டுவார்கள் ஆனால் வேலை செய்யமாட்டாரர்கள். என்று, உங்களுக்கு தெரியும் கடந்த மாதம் டயகம பாதைக்கு அடிக்கல் நாட்டினோம். இன்று போய் பாருங்கள் வேலை நடந்து கொண்டிருக்கிறது.என்;னை பொருத்த வரையில் நான் அரசியல் வாதியல்ல நான் ஒரு நிர்வாகி ஆகவே எனக்கு ஊடகங்களுக்கு வந்து நான் செய்யும் வேலைகளை சொல்லிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.என்னை என்பாட்டுக்கு விட்டால் நான் எனது வேலையினை செய்து கொண்டு போவேன.; அதே நேரம் இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து இருப்பீர்கள்.கூட்:டு ஒப்பந்தம் கூடாது அது தொழிலாளர்களை கட்டுப்படுத்துவது என்று ஆனால் கூட்டு ஒப்பந்தம் கம்பனிகளை கட்டுப்படுத்துவது தான் உண்மை ஆகவே இன்று தொழிலாளர்கள் இதனை புரிந்துள்ளதனால் அது தொடர்பாக கேள்வி கேட்பதில்லை.
ஆயிரம் ரூபா சம்பளத்தினை மாத்திரம் வைத்து கொண்டு அவர்கள் இன்று அதனை எதிர்த்து வாக்களித்துள்ளார்கள் ஆனால் எத்தனையோ நல்ல விடயங்கள் அதில் உள்ளது மலையகத்திற்கு பல்கலைக்கழகம் மும்மொழி பாடசாலை,என்றெல்லாம் உள்ளது.
இன்னும் சிலர் தெரிவித்து வருகிறார்கள் வரவு செலவு திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஒன்றுமில்லை நிதி ஒதுக்கவில்;லை. வரவு செலவு திட்டம் என்பது முழு நாட்:டுக்கும் தான் தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரமல்ல என்பதனை முதலில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இன்று நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கிரிலஸ்பாம் என்ற மக்களுக்காக வீதியினை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆகவே மலையக மக்கள் என்றால் அவர்களும் இந்த நாட்டில் உள்ளவர்கள் தான் ஆகவே அவர்களை தனித்து பார்க்க வேண்டிய அவசியமில்லை.
அதே நேரம் யார் யார் எந்த கட்சியிலிருந்தாலும் பரவாயில்லை ஆனால் தொழிற்சங்க ரீதியாக ஒன்றாக இருங்கள் அப்போது தான் கம்பனி காரர்கள் பயப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
