http://ceylononline.lk/

Ceylon Online News Portal

எட்டு கோடி ரூபா செலவில் கிரிலஸ்பாம் கே.ஜி.கே.வீதி காபட் இட்டு புனரமைக்க நடவடிக்கை.

கொட்டகலை நுவரெலியா பிரதான வீதியினை இணைக்கும் பிரதான தோட்டப்பாதைகளில் ஒன்றான கிரிலஸ்பாம் ,கே.ஜி.கே ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதை தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் இன்று (22) திகதி அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த பாதை நாட்டை கட்டியெழுப்பு சௌபாக்கியா தொலைநோக்கு மற்றும் ஒரு லட்சம் கிராமிய பாதைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகிணங்க நெடுஞசாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்சன் பர்னாண்டோவின் ஆலோசனைக்கமைய கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் நிமல் லன்சா அவர்களின் வழிகாட்டலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் அவர்களின் பங்களிப்புடன்;  குறித்த பாதையின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சுமார் 4.45 கிலோ மீற்றர் காபட் இட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ள குறித்த பாதைக்கு அரசாங்கம் சுமார் 80 மில்லியன் ரூபா செலவு செய்யப்படவுள்ளது.
குன்று குழியுமாக காணப்பட்ட குறித்த பாதை நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாதன் காரணமாக கடந்த காலங்களில் பொது மக்கள் இவ்வீதியினை புனரமைத்து தருமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுப்பட்டனர்.

அதனை தொடர்ந்து ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் பொது மக்கள் விடுத்த வேண்டு கொளினையடுத்தே குறித்த பாதை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் தேசிய மரம் நடுகை வேளைத்திட்டத்தின் கீழ் மா,கொய்ய,பழக்கன்றுகளும் ஏனைய கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
குறித்த வீதி அபிவிருத்தி செய்வதன் மூலம் 4500 இற்கும் மேற்பட்ட மக்கள் நன்மையடைகின்றனர்.
கொட்டகலை பிரதேசசபையின் தலைவர் ராஜமணி பிரசாத் அவர்களின் ஏற்பாட்டடில் நடைபெற்று இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *