http://ceylononline.lk/

Ceylon Online News Portal

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ஹட்டன் ஹைலன் கல்லூரியில் 46 மாணவர்கள் சித்தி.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் இம்முறையும் 46 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக ஹலன்ஸ் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வெளியான பெறுபேறுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..
வெளியான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மிகச் சிறந்த பெறுபேறுகளை மீண்டும் ஒரு முறை பெற்றுள்ளது.
இது ஹட்டன் கல்வி வலயத்திலும் மாவட்ட மட்டத்திலும் நான் அறிந்த வகையில் மாணத்திலும் அதிகூடிய மாணவர்களை சித்தியடைய செய்த பாடசாலையாக எமது பாடசாலை தொடர்ந்து தக்க வைத்துள்ளது என்பது பெருமைக்குரிய விடயமாகும்.இம்முறை எமது பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 103 மாணவர்களில் நுவரெலியா மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட வெட்டு புள்ளிகளை விட அதிகமான புள்ளிகளை பெற்று 46 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக இந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைத்த ஆசிரியர்கள் பாட ஆசிரியர்கள்,வகுப்பாசிரியர்கள்,பிரதி தலைவர்கள் பிரதி அதிபர்கள்,பெற்றோர்களையும் இந்த வேளையில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன் இவர்களின் ஒத்துழைப்பு காரணமாக ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மூன்று தேசிய பரீட்சைகளிலும்.தொடர்ச்சியாக இந்த சமூகத்திற்கு சிறந்த பெறுபேறுகளை பெற்றுத்தந்து வருகிறது.
அந்த வகையில் இந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்த அனைத்து மாணவச்செல்வங்களையும் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்.இந்த பரீட்சையில் ஒரேயொரு மாணவர் மாத்திரம் 70 புள்ளிகளுக்கு கீழ் பெற்றுள்ளார். ஏனைய அனைத்து மாணவர்களும் பரீட்சைத்திண்களம் அறிவித்திக்கின்ற 70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் இந்த பரீட்சைக்காக வீனாத்தாள்களை அச்சிட்டு தந்த ஹட்டன் கல்வி வலயம் மத்திய மாகாண திணைக்களம் ஆகிய வற்றிக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவிக்க கடமை பட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *