http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொரோனா அச்சுறுத்தலால் கல்வி பாதிக்காதிருக்க மத்திய மாகாண கல்வித்திணைக்களத்தினால் விசேட வேளைத்திட்டம்.

கொரோன அச்சுறுத்தல் காரணமாக மத்திய மாகாணத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் கல்வி பெறுபேறுகள் குறையாது அதனை மேலோங்க செய்வதற்காக மத்திய மாகாண கல்விப்பணிப்பாளர் ஈ.பி.டி.கே.ஏக்கநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைய சில்பாலோக வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களை இலக்காக கொண்ட 09 பாடங்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்தவாரே கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சுமார் 35000 கற்றல் நூல்களை ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனை கோட்டக் கல்வி பணிமனையூடாகஇபாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்து சுகாதார பொறிமுறைகளுக்கு அமைவாக மாணவர்கள் கைகளில் கிடைக்கும் வகையில் வழி செய்துள்ளதாக ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

வலயக் கல்விப் பணிமனைக்கு அணுப்பி வைக்கப்பட்ட நூல்களை கோட்டக்கல்விப்பணிப்பாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் நிகழ்வு இன்று (16) ஹட்டன் வலயக்கல்விப்பணிமனையில் நடைபெற்றது அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
இன்று மாணவர்கள் சூம் கிளாஸ் வட்சப் கிளாஸ் என பல்வேறு ஒன்லைன்  வகுப்புக்கள் காரணமாக பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்துள்ளனார். இதனை நிவர்த்தி செய்யும் வகையிலும் அதிகமான தோட்டப்புறங்களில் தொலைபேசிகளுக்கு முறையான சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு இந்த வகுப்புகளில் பங்கு கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றன.அது மாத்திரமன்றி ஒரு சில பெற்றோர்களுக்கு தொலை பேசி வசதிகள் கிடையாது அவர்கள் யாவரையும் கருத்தில் கொண்டு இந்த நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதில் ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும் கூட மாணவர்கள் சுயமாக கற்று பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவே அதற்காக நான் அனைவரின் சார்பாகவும் மத்திய மாகாண திணைக்களத்திற்கு நன்றி கூறுகிறேன். என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *