http://ceylononline.lk/

Ceylon Online News Portal

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் இரண்;டு தோட்ட மாணவர்கள் 196 புள்ளிகளை பெற்று சாதனை.

பரீட்சைத்திணைக்களத்தினால்; நேற்று (15) திகதி வெளியிட்ட தரம் ஐந்து புலமை பரிசில் பெறுபேறுகளில் ஹட்டன் கல்வி வலயத்தில் அதிக கஸ்ட்ட பிரதேசங்களான தோட்டப்பாடசாலைகளைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 196 அதிகூடிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.


இதில் ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் மூன்றைச் சேர்ந்த மஸ்கெலியா மொக்கா டிசைட் பாடசாலையை சேர்ந்த மதியழகன் சவிதரன் என்ற மாணவன் 196 புள்ளிகளையும் மஸ்கெலியா அப்புகஸ்தென்ன வித்தியாலயத்தில் நந்தகுமார் நவீசனா என்ற மாணவியும் 196 இரு மாணவர்கள் ஆகக்கூடிய புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையினை பெற்றுள்ளனர்.
டிசைட் பாடசாலையிலிருந்து மேலும் ஒரு மாணவரும் அப்புக்கஸ்தென்ன பாடசாலையில் மேலும் மூன்று மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மூடியிருந்த நிலையிலும் பாடசாலைகளில் பல்வேறு வளக்குறைபாடுகள் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான ஒரு சாதனை படைத்திருப்பது மலையக மாணவர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்கலாம் என்பதனை எடுத்துக்காட்டுவதாக கல்வி சமூகங்கள் தெரிவிக்கின்றன.


குறித்த மாணவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்ற வெற்றியினை கௌரவப்படுத்துவதற்கு ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களது வீடுகளுக்கே சென்று அந்த மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதே வேளை இந்த மாணவர்களை கௌரவப்படுத்துவதற்காக பிரதேசத்திலுள்ள அரசசார்பற்ற நிறுவனத்தை சேர்ந்த நிறுவன தலைவர்களும் அவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர்.


குறித்த பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் விஞ்ஞானியாகவும் ,வைத்தியராகவும் வரவேண்டும் என்றே ஆசைப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இம்முறை வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் தோட்டப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் குறிப்பிட்ட அளவு சித்தி பெற்றிருப்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.


இது குறித்த கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்கள் கருத்து தெரிவிக்கையில் மலையக பகுதியில் மிகவும் அதிகஸ்ட்ட பாடசாலைகளாக எமது பாடசாலைகள் காணப்படுகின்றன அடிப்படை வசதிகள் கூட இன்றியே நாங்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறான ஒரு சூழ் நிலையில் இன்று எமது பாடசாலையினை சேர்ந்த மாணவர்கள் எமது பாடசாலைகளுக்கு ஒரு பெரிய மதிப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். ஆகவே எம்மாலும் முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளனர் ஆகவே இந்த வெற்றிக்காக உழைத்த அதிபர்கள் ஆசிரியர்கள் கல்வி திணைக்கள அதிகாரிகள் பெற்றார்கள் வலய பணிமனை ஆகிய அனைத்துக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *