இலங்கையில் கொரோனா தொற்றினால் 22 ஆவது மரணமும் பதிவு
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 31ம் திகதி சுகயீனம் காரணமாக பாணதுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
உயிரிழந்த நபர் 27 வயதுடைய பாணதுறை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.இம்மரணம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 22ஆவது மரணம் என தேசிய தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
