கொரோனா தொற்று பற்றி சுகாதார பிரிவினரால் அதிர்ச்சிகரமான தகவல்.
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோய் தொற்றாளர்களில் 90 சதவீதமானவர்கள் எவ்வித நோய் அறிகுறியும் இல்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இதற்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்ஸினை விட இது மிக வீரியமானது இது மிக வேகமாக மற்றவர்களுக்கு தொற்றக்கூடியது.
எனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட காலத்தினுள் எவர் ஒருவருக்காவது சில அறிகுறிகள் காணப்பட்டால் 0117966366 தொலை இலக்கத்திற்கு உடன அறியத்தருமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
