மேல் மாகாணம் மற்றும் சில பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டு இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவானது மேலும் 7 நாட்களுக்கு நவம்பர் 9ம் திகதி காலை 5.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கோவிட் -19 பரவலை தடுக்கும் செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட பொலிஸ் பிரிவிற்கும் குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு சட்டமானது நவம்பர் 9ம் திகதி காலை 5.00 மணிவரை நடைமுறையில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
