ஹட்டன் பகுதியில் மேலும் 10 பேருக்கு கொரோனர் நகரத்துக்கு காலவரையறையின்றி பூட்டு
ஹட்டன் நகர் பகுதியில் 10 கொரோனா தொற்று உறுதிபடுத்தியதனையடுத்து ஹட்டன் நகரில் இன்று (27) காலை முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காலவரையழறயின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் பிறக்கப்பட்டதனை தொடர்ந்து திறக்கப்பட்டிருந்த கடைகளை மூடுமாறும் தறித்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றுமாறும் மக்கள் உடனடியாக வீடுகளுக்கு செல்லுமாறும் பொலிஸார் வழியுறுத்தினர்.
இதன் காரணமாக இன்று காலை நகருக்கு வந்தவர்கள் செல்வதற்கு வழியின்றி பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.

இதே வேளை ஏனைய பிரதேசங்களுக்கு செல்பவர்கள் ஹட்டன் அதிகார பிரதேசத்தை தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்தி தங்களுடை அத்தியவசிய தேவைகளை நிறை வேற்றிக்கொள்ள முடியும்.
எனினும் ஹட்ட பொலிஸ் பிரதேசத்தில் மக்கள் தனிமை சட்டங்களை பின் பற்றி நடந்து கொள்ள வேண்டுமென பொலிஸார் வழியுறுத்தினார்.
ஹட்டன்; பகுதியில் மேலும் 10 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் ஹட்டன் பகுதியில் ஏழு பேரும் எபோஸ்லி பகுதியில் 03 பேருமாக மொத்தம் 10 பேர் இது வரை பி.சி.ஆர்.பரிசோதனையின் மூலம் இனங்காணப்பட்டுள்ளன.
ஹட்டன் மீன் வர்த்தக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதனை தொடர்ந்து அவருடன் நெருங்கி பழகிய 25 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
இந்த கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களில் மீன் வர்த்தகரின் குடும்பத்தில் ஐந்து பேர் அடங்குவதாகவும் ஏனையவர்கள் அவருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது,
தற்போது இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 மேற்பட்ட அங்கத்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளமையினால் ஹட்டன் பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்;கை மேலும்; அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் காரணமாகவே இந்த பொலிஸ் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு சட்டம் பிறக்கப்பட்ட பின் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் பாலசந்திரனின் அறிவுறுத்தலுக்கமைய ஹட்டன் நகரில் பொது மக்கள் கூடும் இடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
திடீரென ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதனால் இன்று ஹட்டன் பகுதியில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்வேறு நெருக்கடி நிலைக்கு உள்ளாகியதுடன் ஹட்டன் பொலிஸார் அவர்களுக்கு வீடுகளுக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதே வேளை கொட்டகலை பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் கொட்டகலை நகரில் அமைந்துள்ள மது பானசாலைகள் இரண்டுக்கு பல தடவைகள் வந்து சென்றுள்ளமையினால் அந்த மது பானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதில் வேலை செய்தவர்கள் அவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் தெரிவித்தார்.
