கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக பூட்டப்பட்ட ஹட்டன் நகரம் வழமைக்கு திரும்பின.
ஹட்டன் நகரில் மீன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று பரவியுள்ளது என இனங்காணப்பட்டதனை தொடர்ந்து மக்களின் பாதுகாப்பு கருதி ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவரின் பணிப்புரைக்கிணங்க சகல கடைகளும் நேற்று (26) பகல் மூடப்பட்டன எனினும் இன்று (26) சகல வர்த்தக நிலையங்கள்,வங்கிகள்,தபாலகங்கள் உட்பட அரச திணைக்களங்கள் யாவும் திறக்கப்பட்டு வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

பொது போக்குவரத்து சேவைகள் வழமை நிலைக்கு திரும்பிய போதிலும் மக்களின் வருகை மிகவும் குறைவாகவே காலை வேளையில் காணப்பட்டன. இதனால் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்த பஸ்கள் குறைந்த அளவே சேவையில் ஈடுபட்டிருந்தமை காணக்கூடியதாக இருந்தன.

இன்றைய தினம் ஹட்டனிலிருந்து கொழும்புக்கான பஸ்சேவைகள் இடம்பெறவில்லை.அவிசாவலை மாத்திரம் குறித்த சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் டிப்போவின் உத்தியோகஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.

தபாலகங்கள் மற்றும் வங்கிகளில் வழமை போலவே சேவைகள் இடம்பெறறன.
ஒரு சில வங்கிகளில் நீண்ட வரிசை காணப்பட்டன. வங்கி பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் சமூக இடைவெளிகளை பேணுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

இதே வேளை கொவிட் 19 தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் சில பெற்றோர்கள் வங்கிகளுக்கும் கடைகளுக்கு தமது பிள்ளைகளுடன்; அசமந்த போக்கில் வருகை தருவதாகவும் இது குறித்த பெற்றோர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

