http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஹட்டனில் மீன் விற்பனை நிலையத்துடன் தொடர்புடையவருக்கு கொரோனா தொற்று உறுதி, மார்க்கட் பகுதிக்கு பூட்டு.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நகரில் மீன் விற்பனை நிலையம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து ஹட்டன் நகரில் அமைந்துள்ள பழைய மார்கட்,புதிய மார்கட் மற்று சந்தை கட்டத்தொகுதி. அவர் வந்த சென்ற உணவகங்கள் உட்பட அனைத்து மூடுவதற்கான நடவடிக்கைகளை ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் பாலசந்திரனின் பணிப்புரைகமைய இன்று (25) காலை மூடப்பட்டன.


அதனை தொடர்ந்து அந்த பிரதேசம் ஹட்டன் டிக்கோயா நகர சபையினால் தொற்று நீக்கமும் செய்யப்பட்டன.
ஹட்டன் நகரில் அமைந்துள்ள பிரதான மீன் வர்த்தக நிலையத்தில் இருவர் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் கொழும்பு பெஹெலியகொட மொத்த மீன் விற்பனை நிலையத்தில் மீன் கொள்வனவு செய்து வந்துள்ளனர்.


அதனை தொடர்ந்து அம்மீன் விற்பனை நிலையத்தில் பலருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதினை தொடர்ந்து ஹட்டன் அந்த மொத்த விற்னை நிலையத்துடன் சம்பந்தமுடைய நபர்கள் உட்பட ஐந்து மீன் கடைகள் மக்களின் பாதுகாப்பு கருதி ஹட்டன் டிக்கோயா நகர சபை மூட நடவடிக்கை எடுத்திருந்தன இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதனை தொடர்ந்தே இன்று இப்பகுதி மூடப்பட்பட்டுள்ளதுடன் அத்தொகுதியில் வர்த்தக நிலையங்களில் வேலை செய்தவர்கள் உரிமையாளர்கள் அவருடன் தொடர்புடையவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


இது குறித்து ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆர். பாலகிருஸ்ணன் கருத்து தெரிவிக்கையில் ஹட்டன் நகரில் மீன் விற்பனை நிலையத்துடன் தொடர்புடையவரென கருத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதiனால் இந்த கட்ட தொகுதியில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி அவர்களுக்கு பி.சி,ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்;. அது வரை குறித்த கட்டட தொகுதியினை மூடுமாறு ஹட்டன் நகர சபையின் தலைவர் அவர்களின் அறுவுறுத்தலுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே வேளை அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொகவந்தலா பகுதியில் ஒருவரும் மஸ்கெலியா பகுதியில். ஒருவரும், கடவல மற்றும் .மில்லகஹமுல ஹட்டன் ஆகிய பகுதிகளிலிருந்து ஒவ்வொருமாக மொத்தம் ஐந்து பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் குடும்பங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் அவர்கள் சென்று வந்த இடங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளதுடன் நிலையங்களின் அங்கத்தவர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *