http://ceylononline.lk/

Ceylon Online News Portal

பொது தேர்தலின் போது சுகாதார சட்டங்கள் முழுமையாக அமுல் படுத்தப்படும் சுகாதார வைத்திய பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவிப்பு.

பொதுத் தேர்தலில் போது சுகாதார சட்டங்களை முழுமையாக மீண்டும் அமுல்படுத்தப்பட போவதாக சுகாதார வைத்திய பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துNளே;ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்;த்தப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து பொது போக்குவரத்து சேவைகள் பயன்படுத்தபவர்களின் செயப்பாடுகளும் வைத்தியசாலைக்கு வருபவர்களின் செயப்பாடுகளும் வருத்தம் தரும் அளவில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. போக்குவரத்தின் போது ஒரு ஆசனத்தில் ஒருவர் அமர வேண்டியதும் ,முகம் கவசம் அணி வேண்டும் என்று குறிப்பிடப்பட்ட போதும் அதனை எவரும் கடைப்பிடிப்பது போல் தெரிவதில்லை. இது மிகவும் ஆபத்தானதாகும்.
இந்த நிலைமை நாட்டில் பல இடங்களில் காணப்படுவதனால் சுகாதார வழிமுறைகளை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *