http://ceylononline.lk/

Ceylon Online News Portal

காற்றினால் கொட்டகலை குயின்பெரி தோட்டத்தில் ஐந்து வீடுகள் சேதம்;

மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கடும் காற்றுடன் கடும் மழை பெய்து வருகிறது.இதனால் தோட்டத்தொழிளாலர்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.


நாவலப்பிட்டிய குன்ஸ்பரி கீழ் பிரிவு தோட்டத்தில் இன்று (13) அதிகாலை வீசிய கடும் காற்றினால் ஐந்து குடியிருப்புகளின் கூரை தகுடு காற்றினால் அல்லுண்டு போய்யுள்ளன இதனால் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த வீடுகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.


இதே வேளை கடும் காற்று காரணமாக கொட்டகலை ஸ்டோனிகிளிப் பகுதியில் மரம் ஒன்று மின்கம்பிகள் மீது சரிந்து வீழ்ந்ததனால் கொட்டகலை பகுதியில் பல இடங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டன்
இதேவேளை மலையக பிரதேசத்தில் காற்றுடன் கூடிய தொடர்வதன் காரணமாக அடிக்கடி மின்சார துண்டிப்பு ஏற்பட்டுவருவதுடன் சில இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *