கொரோனா மற்றும் கொட்டடுமழையினையும் பொறுப்படுத்தாது தரம் ஐந்து புலமை பரிசில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொட்டும் மழையினையினையும் கடும் காற்று கடும் குளிர் ஆகியன பொறுப்படுத்தாது மலையக மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.
இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு காலை 8.00 மணி முதல் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் மிகவும் உட்சாகமாக வருகை தந்திருந்தனர்.
தரம் ஐந்து புலமை பரிசில் நடைபெறும் சகல பாடசாலைகளிலும் சுகாதார அறிவுரைகளுக்கமைவாக நேற்றைய தினம் (10) திகதி தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

எனினும் நோர்வூட் பகுதியில் சில பாடசாலைகள் தொற்று நீக்கம் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் தோற்றுவற்கான சுகாதார ஏற்பாடுகளை சுகாதார அறிவுறுத்தல்கனுக்கு அமைவாக கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைவாக கைகழுவுதல்இகைகளை தொற்று நீக்கம் செய்தல் மாணவர்களுக்கிடையே இடைவெளி பேணுதல்இமுகக்கவசம் அணிதல் உட்பட சுகாதார பழக்க வழக்கங்கள் பின்பற்றப்பட்டிருந்தன.

இம்முறை தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்காக ஹட்டன் கல்வி வலயத்தில் 34 நிலையங்களில் பரீட்சைகள் நடைபெற்றன.
இப்பரீட்சைக்காக 3788 மாணவர்கள் தோற்றியுள்ளதாகவும்இஇவர்களில் தமிழ் மொழி மூலம் 2181 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 1607 மாணவர்களும் தோற்றியிருப்பதாக ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
குறித்த மாணவர்கள் இவ்வருட நடைபெறும் பரீட்சையில் சகல சவால்களை வெற்றிகொண்டு பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற வாழ்த்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
