ஜனாதிபதி கோட்டபாய அவர்களின் கிரமத்து ஒரு வீடு இன்று ஹட்டனில் அங்குரார்ப்பணம்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் எண்ணக்கருவுக்கமைவாக நாளை உங்களுக்கு கராமத்துக்கு ஒரு வீடு எனும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட ஏழை குடும்பம் ஒன்றுக்கு வீடு ஒன்று பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் கீழ் ஹட்டன் ஆரியகம் பகுதியில் உள்ள கிராமத்தில் வாழும் ஏழை குடும்பம் ஒன்றுக்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக வீடு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஹட்டன் நகரசபையின் தலைவர் எஸ்.பாலசந்திரன் அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் ஜயசங்கர ஆகியோரின் தலைமையில் இன்று (08) காலை நடைபெற்றன.

குறித்த வீடு காஞசனா சந்தமாலி என்று நான்கு அங்கத்தவர்களை கொண்ட குடும்பத் தலைவிக்கே பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆறு லட்சம் ரூபா பெறுமதியில் நிர்மானிக்கப்படவுள்ள குறித்த வீடு இரண்டு படுக்கை அறைகள்,ஒரு சமையலறை,விறாந்தை,குளியலறை கொண்ட அங்கு சம்பூரணமான வீடு ஒன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது,
இந்நிகழ்வுக்கு கிராம சேவகர் சுவர்ணலதா,அம்பகமுவ பிரதேச செயலகத்தின் உத்தியோகஸ்த்தர்கள்,ஹட்டன் டிக்கோயா நகர சபையின் மக்கள் பிரதிநதிதகள்,பிரதேச வாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
