மரண வீடொன்றில் கலந்து கொண்டு திரும்பிக்கொண்டிருந்த வேன் விபத்து 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி.
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை கொழும்பு பிரதான வீதியில் நகருக்கு ஒரு கிலோமீற்றர் சமீபமாக கொழும்பு வீதியில் பபஹேன பகுதியில் மரண வீடு ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த 12 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (05) 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கம்பகஹ பகுதியிலிருந்து நுவரெலியாவில் உள்ள மரண வீடு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான ஒன்பது பேர் மேலதிக சிகிச்;சைக்காக நாவலபிட்டி ஆதர வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் ஏழு பெண்களும் 06 ஆண்களும் காணமடைந்துள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.
குறித்த விபத்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் சந்தேகிக்கப்படுகின்றது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

