http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மலையக மக்கள் முன்னணியின் 17 மாவட்ட தலைவர்களை தெரிவு செய்ய 16 நிலையங்களில் இன்று வாக்கெடுப்பு.

மலையக மக்கள் முன்னணயின் நுவரெலியா மாவட்டத்தில் 17; தலைவர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (04) திகதி காலை 10.மணி முதல் மாலை 2.00 மணிவரை நடைபெறுவதற்கான ஒழுங்குகள் அக்கட்சியின் தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்றது.

16 வாக்கெடுப்பு நிலையங்களுக்குமான வாக்கெடுப்பு பெட்கள மற்றும் வாக்கு;சசீட்டுகள்; பொது தேர்தல் நடைபெறுவது போல் ஹட்டன் பிரதான காரியாலத்தில் நடைபெற்ற அறிவுறுத்தல்களை தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டன.


இதன் போது நுவரெலியா மாவட்டத்தில் ராகலை, நுவரெலியா, நானுஓயா ,டயகம, பொகவந்தலாவை, நோர்வூட் உள்ளிட்ட 15 நிலையங்களுக்கும் கண்டி மாவட்டத்தில் உடபுஸ்ல்லாவுக்குமாக 16 நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


இது வரை மாவட்ட தலைவர்களை தெரிவு செய்து வந்த முறையினையினை மாற்றியமைத்து ஜனநாயக ரீதியில் மாவட்ட தலைவர்களை தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.


குறித்த தலைவர்கள் அக்கட்சியின் அங்கத்தவர்களினால் வாக்களிக்கப்பட்டு மாவட்ட தலைவர்கள் தெரிவு செய்யப்படுவர்.ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையமும் மலையக மக்கள் முன்னணியின் காரியாலங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் கடமைகளுக்கு ஓய்வு பெற்ற அரச உத்தியோகஸ்த்தர்கள் மற்றும்,மலையக மக்கள் முன்னணியின் பிரதேச அலுவலக உத்தியோகஸ்த்தர்கள் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *