போடைஸ் பகுதியில் தனியார் பஸ் விபத்து பாடசாலை மாணவர்கள் உட்பட 33 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதி.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் போடைஸ் பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த பாடசாலை மாணவர்கள் உட்பட 33 பேர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று போடைஸ் என் .சி. என்ற பிரதேசத்தில் (02) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

டயகம பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் ஹட்டன் ,நோர்வூட், டிக்கோயா,உள்ளிட்ட பிரதான பாடசாலைகளில் கல்வி பயிலும் சுமார் 22 மாணவர்களும் 11 பெரியவர்களும் காணமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
