http://ceylononline.lk/

Ceylon Online News Portal

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மலையத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று மிக சிறப்பாக நடைபெற்றன.

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு நாடெங்கிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில் மலையகத்திலும் பல சிறுவர் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்கட்ட டிக்கோயா வனராஜா மேல்பிரிவு பாடசாலையில் ஒழுங்கு செய்திருந்த சிறுவர் தின நிகழ்வு இன்று (01)திகதி அப்பாடசாலையின் அதிபர்.திருமதி கே.சசிரேகா தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது சிறுவர்கள் மகிழ்விக்கக்கூடிய பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுக்களால் மாணவர்களின் அறிவுத்திறன் மனப்பாங்கு,நவீன உலகிக்கு ஏற்ற வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இதன் போது நாட்டின் தேவையினை பாடசாலை காலப்பபகுதியிலேயே உணர்ந்து செயப்படும் வகையில் தென்னை மரக் கன்றுகளும் சுற்றுப்புற சூழலினை பாதுக்காக்கும் வகையில் ஏனைய மரக்கன்றுகளும் இதன் போது நாட்டி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இப்பாடசாலையின் மாணவர்களுக்கும் மற்றும் இப்பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்களுமாக சுமார் 300 மாணவர்களுக்கு இதன் போது பரிசில்களும் இனிப்பு பண்டங்கள் மற்றும் மதிய உணவும் அளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் தமிழர்களின் பண்பாட்டினை உணர்த்தும்; வகையிலும்,பாரம்பரியத்தினை காத்து நவீனதுவத்தினை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுக்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த நிகழ்வினை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு ஹட்டன் முபாரக் டெக்ஸ்டையில்ஸ் அனசரணையினை வழங்கி இருந்ததுடன் அதன் உரிமையாளர் முபாரக் அவர்கள் இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி மாணவர்களை உட்சாகப்படுத்தினார்.
ஒக்டோபர் முதலாம் திகதி எங்கள் நாடு எங்கள் கைகளில் என்ற தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகின்றன.


இரண்டாம் உலக போரில்; பல அழிவுகள் சந்தித்தபோது பலரும் உயிர் சேதம் பொருள் கட்டிடம் உள்ளிட்ட பாதிப்புகளை பற்றி பேசினார்களே தவிர சிறுவர்களின் இழப்பினை பற்றி எக்லாண்டன் ஜெப் என்ற பெண் மனியே சிறுவர்களுக்கும் உரிமை உண்டு அவர்களை பாதுகாக்கப்படவேண்டுமென குரல் கொடுத்தவர் மட்டுமல்லாமல் சிறுவர் உரிமை சாசனத்தையும் 1923 ஆண்டு வரைந்தார் 1924 ம் ஆண்டு காலப்பகுதியில் சர்வதேச சங்கத்தினால் ஏற்றுகொள்ளப்பட்டது 1989 ஆண்டு நவம்பர் 20 .ஐக்கிய நாடுகள் சபை அங்கிகரித்தது.


இதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழிந்த நிலையில் இலங்கை அரசு 1991 ஜீலை 12 சிறுவர் உரிமை சாசனதில் கையொப்பம் வைத்தது. 54 உரிமைகளை ஏற்று கொண்டாலும் நேரடியாக 41 உரிமையை அரசு கட்டாயம் செய்தாக வேண்டும் . இதனை நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. உயிர் வாழ்தல் பங்குகொள்ளுதல் பாகதுகாப்பு மேம்பாடு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.


இலங்கை அரசாங்கம் முடிந்த வரையில் சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கும் சிறுவர்கள் தங்களில் உரிமைகளை அனுபவிக்க கூடிய வகையில் அனைத்து சந்தர்ப்பங்களையும் வழங்கியிருப்பது பாராட்ட வேண்டிய விடயமே
இந்நிகழ்வுக்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *