http://ceylononline.lk/

Ceylon Online News Portal

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 09 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி

நாட்டின் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3333 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 09 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டாரில் இருந்து வருகை தந்த மூவருக்கும் குவைட்டில் இருந்து வந்த இருவருக்கும் ஈரானில் இருந்து வந்த இருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவருக்கும் மற்றும் மாலைத்தீவில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களைத் தவிர சமூகத்தில் வேறு ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைத்து இலங்கையர்களும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி தங்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து அதன் பரவலைத் தடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *