உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கியது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 81 ஆயிரத்தை கடந்துள்ளது.
3 கோடியே 20 லட்சத்து 83 ஆயிரத்து 275 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 74 லட்சத்து 43 ஆயிரத்து 936 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுபவர்களில் 62 ஆயிரத்து 354 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 2 கோடியே 35 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 81 ஆயிரத்து 219 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் முதல் மூன்று நாடுகள்- அமெரிக்கா (2,06,560) , பிரேசில் (1,39,065),இந்தியா (90,020)
