ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு எச்சரிக்கை.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டில் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது.இந்த மழை ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெnலியா பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்..

குறித்த வீதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.இதனால் ஒரு சில இடங்களில் ஒரு வழி போக்குவரத்தே காணப்படுகின்றன.
அதிக மழை காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையில் காணப்படுவதனாலும்,அடிக்கடி பனி மூட்டம் காணப்பபடுவானாலும் வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்து வாகனசாரதிகள்,மிகவும் அவதானமாக தமக்குரிய பக்கத்தில் வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சில இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளதுடன் நீர் வடிந்தோடும் கால்வாய்களும் மூடப்பட்டுள்ளன.
