http://ceylononline.lk/

Ceylon Online News Portal

ஆசியாவின் ஆச்சரியம் ஆகாயத்தில் தோட்டம் கோவா செடிக்கு 1500 நாட்கள் பூர்த்தி.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் உலக மக்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பது எமது கிராத்து பழமொழி,எனவே எமது மக்கள் தொன்று தொட்டு விவசாயத்திற்கும் விவசாயத்திற்கு உதவி செய்யும் உயிரினங்களுக்கும் உரிய மரியாதை செலுத்தி அதற்கு கௌரவமளித்து வந்துள்ளனர்.அதற்காக தமிழர்கள் பல்வேறு பண்டிகைகளை விவசாயத்திற்கு முக்கியத்துவமளித்து கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் அதனையும், தாண்டி நாட்டிக்கும் விவசாயத்திற்கும் கௌரவமளிக்கும் வகையில் நுவரெலியா நானுஓயா உடரதல்ல தோட்டத்தில் வசிக்கும் எஸ்.சரவணபவன் என்பவர் தனது வீட்டு தோட்டத்தில் 1500 நாட்கள் ஓங்கி வளர்ந்த இலை கோவா செடியின் பூரத்தியினை முன்னிட்டு கேக் வெட்டி பூஜை செய்து விவசாயத்திற்கு ஒரு புதிய அத்தியாயத்தினை எழுதியுள்ளார்.


இந்த பூர்த்தி நாள் நிகழ்வு அவரது அல்லத்தில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதன் போது தனக்கு 4 வருடங்களாக உணவளித்தமைக்காக கோவா செடிக்கு பூஜை செய்து கேக் வெட்டி கொண்டாடினார்.

குறித்த கோவா செடி 25 அடி உயர் மரமாக வளர்ந்து பல கிளைகளை தந்து பாரிய அளவில் பாரிய அளவில் விளைச்சளை தந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 15 வருட காலமாக விவசாயத்தில் ஈடுபடும் குறித்த நபர் விவசாயத்தின் மூலம் இந்த உலகம் மற்றும் நாடு முன்னேற்றம் அடைய முடியுமென நம்பிக்கையுடன் செயப்பட்டு வருவதுடன் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் விவசாயத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்து பாராட்டுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.


இது குறித்த இவர் கருத்து தெரிவிக்கையில் நான் இந்த கோவா செடியினை 2016 ஆண்டு தான் நாட்டினேன் வழமையாக கோவா செடியொன்று ஒரு வருட காலம் தான் பலம் தரும் ஆனால்; இந்த கோவா செடிக்கு அன்பு காட்டி மிகவும் விருப்பத்துடன் தொடர் முயற்சியுடன் தொடர்ந்தும் இதனை பராமறித்து வந்ததனால் இன்று இந்த கோவா செடி மரமாகி எனக்கு நான்கு வருடமாக பலன் தந்து கொண்டிருக்கிறது முயற்சி செய்தால் எதிலும் வெற்றி கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை விவாசாயம் என்பது தரையில் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி வானில் மற்றும் கடல் செல்பவர்களுக்கும் உணவளிக்க கூடியது.ஆகவே அவ்வாறு உணவளிக்கும் விவசாயத்திற்கு கௌரவளிக்கும் நாட்டில் நான் பிறந்ததையிட்டு மகிழ்ச்சியடையகிறேன்.அத்தோடு இவ்வாறு கௌரமளிப்பதன் மூலம் எமது நாட்டுமக்கள் விவசாயத்தின் பெருமையினை உணர்ந்து படித்துவர்கள் உட்பட அனைவரும் தங்களுக்கு தேவையான உணவினை விவசாயம் செய்து பெற்றுக்கொள்ள இவ்வாறான செயப்பாடுகள் வழிவகுக்கும் என்பதற்காகவே நான் இதனை ஒழுங்கு செய்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *