http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 55 லட்சம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், இன்று  இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,87,581 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று கடந்த 24 மணி நேரத்தில் 86,961 பேருக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்  கடந்த 24 மணி நேரத்தில் 1,130 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87,882 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *